Friday, June 12, 2009
வெயில் காலம் வந்தாலே மாங்காயும் வரும்.அதிலும் வீட்டில் மாங்காய் மரம் இருந்துவிட்டால் எல்லாம் மாங்காய் மயம் தான்.மாங்காய் பருப்பு,மாங்காய்/மாங்கொட்டை குழ்ம்பு என்று சகலமும் மாங்காய் சேர்த்து செய்யும் உணவு வகைகள் அதிகம் ....தஞ்சாவூர் திருச்சி ஜில்லா மக்கள் அதிகம் விரும்புவது இந்த வகை குழ்ம்பு.மிகவும் ருசியானது.புளி இல்லாமல்/கம்மியாக சேர்த்து செய்வதால் உடம்பிற்கும் நல்லது.
மாங்காய் குழ்ம்பு
தேவையான பொருட்கள்:
மாங்காய் : சிறியது(பெரிய எலுமிச்சை அளவு ) 4 அல்லது 5 (காய் அல்லது பாதி பழம்)
புளி : சிறிய நெல்லிக்காய் அளவு.
உப்பு : தேவைக்கு ஏற்ப
சாம்பார் பொடி : 2 மேஜைகரண்டி
தாளிக்க :கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை,சிவப்பு மிளகாய், பெருங்காயம்,
முதலில் மாங்காயை அலம்பி, கத்தியால் நாலு புறமும் கீறிகொள்ளவும்.முழுகும் வரை தண்ணீர் விட்டு 10 அல்லது 15 நிமிஷம் வேக விடவும்.பிறகு புளியை கரைத்து சேர்க்கவும்.உப்பு, சாம்பார் பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.எல்லாம் சேர்ந்து 10 நிமிஷம் கொதித்ததும் கொஞ்சம் அரிசி மாவை ஒரு கரண்டி ஜலத்தில் கரைத்து கொட்டவும்.கடாயில் எண்ணை விட்டு
கடுகை போட்டு வெடித்ததும்,வெந்தயம் பெருங்காயம், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கொதிக்கும் குழஅம்பில் கொட்டவும்.சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Subscribe to:
Posts (Atom)